என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலி டாக்டர் கைது"
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக புகார் வந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் அங்கு திடீர் நேரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில் சோதனை நடத்தினர். கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
அதில், நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 பெண்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் வந்து சென்றது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அங்கு ஏராளமான கர்ப்பிணி பெண்களின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளும் சிக்கி இருக்கிறது. ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், 4 ஆயிரம் பெண் சிசுக்கள் வரை கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெண் குழந்தைகள் வேணடாம் என நினைக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கு கைப்பற்றிய செல்போன் எண்களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையின் உரிமையாளர் கவிதா (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து கவிதா அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கவிதா 10-ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பிற்கு தொடர்பு கொண்டதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10-ம் வகுப்பு படித்த கவிதா என்ற பெண்ணிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நடத்திய ஆய்வில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோர் போல் இருந்தது. உட்பகுதியில் கிளினீக், மருந்து பொருட்கள் மற்றும் கருக்கலைப்பிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தது.
செல்போன் எண்ணை வைத்து தான் இந்த இடத்தை கண்டறியப்பட்டது. கிரிவலப்பதையில் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் சந்தேகப்படாத வகையில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோரும் வைத்திருந்தனர்.
இப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது நாள்தோறும் 2-க்கும் மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய வந்து சென்றது தெரியவந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக கவிதா மற்றும் அவரது கணவர் பிரபு கருக்கலைப்பை தொழிலாக நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இதுவரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம்.
முதற்கட்டமாக கிளினீக் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீட்டில் ஆய்வு செய்யப்படும்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருக்கலைப்புக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் இந்த செயலில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய ஆய்வில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிய ரூ.6 ஆயிரம், கருக்கலைப்பு ரூ.15 ஆயிரம் வசூலித்து பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் டாக்டர் ஆனந்தி மற்றும் அவரது கணவர் தமிழ்செல்வன் வீட்டில் ரகசிய அறையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டருக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற் போது மீண்டும் திருவண்ணாமலையில் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.
வேலூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஜெனிபர். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.
ரேச்சல் ஜெனிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரூ.35 ஆயிரம் சம்பளம் வாங்குவதும், போலி சான்றிதழ் பெற தினேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேர் உதவி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகிறார்கள்.
போலி சான்றிதழுடன் டாக்டர் வேலையில் சேர்ந்த ரேச்சல் ஜெனிபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். #FakeDoctor
மதுரை:
மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி நகர்நல பிரிவுக்கு புகார்கள் வந்தன.
இது குறித்து நகர்நல அதிகாரிகள் அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவத்தன்று சவுராஷ்டிரா புரம் பகுதியில் குறிப்பிட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஆனந்தன் என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதா தாஸ் என்பவர் அலோபதி டாக்டர் என அடையாளப்படுத்திக் கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தார்.
சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவா பார்வைக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த கிளினிக் சென்று சோதணையிட்டு விசாரித்த போது சுப்ரதா தாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவரை சதுரங்கப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? கல்பாக்கத்திற்கு எப்படி வந்து தங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்க வணங்காமுடி. இவர் புதிய மருத்துவ கல்வி தகுதியின்றி தனியார் ஆஸ்பத்திரியில் அலோபதி மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலை நிலை கல்வி மூலம் பி.ஏ.எம்.ஸ் படித்த தங்க வணங்காமுடி மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித தகுதியும் இல்லாதவர்.
ஆனால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர்.
ரிஷிவந்தியம்:
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 32). டி.பார்ம் படித்து முடித்த இவர் தனது வீட்டு முன்பு மருந்துக்கடை நடத்தி வந்தார். மேலும் இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் தனது மருந்து கடையில் உள்ள ஒரு தனிஅறையில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்அடிப்படையில் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜன், ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி ஆகியோர் கொண்ட குழுவினர் ராமமூர்த்திக்கு சொந்தமான மருந்துக்கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ராமமூர்த்தி, நோயாளி ஒருவருக்கு அலோபதி சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் ராமமூர்த்தியை ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராமமூர்த்தியை கைது செய்தனர்.
பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம பகுதிகளில் வீட்டில் ஆஸ்பத்திரி வைத்து அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாரதிக்கு தகவல் எட்டியது.
அதன் அடிப்படையில் தேனி அருகே தேவாரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தம்மிநாயக்கன்பட்டியில் பாரதி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஆபிரகாம் என்பவர் வீட்டில் ஆஸ்பத்திரி வைத்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார்.
அவரை கையும் களவுமாக சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்தனர். உடனடியாக தேவாரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதான ஆபிரகாம் பிளஸ்-2 மட்டுமே முடித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி ஆகும். இவரது குடும்பம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்மிநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்துள்ளது.
மலை கிராம பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் ஆபிரகாம் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டுள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேனி:
தேனி கே.ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் தர்மா (வயது 45). டி.பார்ம் படித்துள்ள இவர் தேனி பங்களா மேடு பகுதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். அங்கு மருந்து வாங்க வருபவர்களிடம் மூளைச் சலவை செய்து அவரே சொந்தமாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
மேலும் ஒரு சில பெண்களுக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட ஒரு சிலருக்கு உடலநலக் கோளாறு அதிகமனதால் தேனி மருத்துவத்துறைக்கு புகார் அளித்தனர்.
அதன் பேரில் வீரபாண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் தர்மாவின் மெடிக்கல் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசிகள், வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ அலுவலர் மணிகண்டன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்